பலரும் டிக்கெட் எடுத்துவிட்டு நான் முதல் நாள் முதல் காட்சிக்கு போறேனே என சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள். முதல் நான்கு நாட்களுக்கான டிக்கெட் விற்றுத் தீர்ந்துவிட்டது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்நிலையில் கமலின் தீவிர ரசிகர் ஒருவர் செய்த காரியம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த சந்திரா என்கிற அந்த ரசிகர் விக்ரம் படத்திற்கான 60 டிக்கெட்டுகள் வாங்கியிருக்கிறார். அதை இதய வடிவில் அலங்கரித்து படுத்தபடி புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த ட்வீட்டை கமல் ரசிகர்கள் லைக் செய்வதுடன், ரீட்வீட் செய்து கொண்டிருக்கிறார்கள். தனக்கு பிடித்த நடிகருக்காக ரசிகர் ஒருவர் இத்தனை டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கியிருப்பது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
Vikram:கமலின் விக்ரம் படத்தை ஏன் தியேட்டரில் தான் பார்க்கணும்னு தெரியுமா?
விக்ரம் படம் ரிலீஸுக்கு முன்பே ரூ. 200 கோடி வசூல் செய்துவிட்டது. விக்ரம் படத்தில் நடித்திருப்பதுடன் தயாரிக்கவும் செய்துள்ளார் கமல். படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் மூலம் வெளியிடுகிறார்.
உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்ய இங்கே கிளிக் செய்க 👇